January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளைய தினமும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரவி சூறாவளி காரணமாக முன்னெச்சரிக்கையின் நிமித்தம் கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமையால் அங்கு பாடசாலைகளை திறக்க முடியாத நிலைமை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த இரண்டு மாவட்டங்கள் தவிர்ந்த வடமாகாணத்தின் மற்றைய மாகாணங்களில் நாளை தினம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.