புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க தாம் தயாராகவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கி, நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீண்டும் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் காட்டுவதாக சிறீதரன் தெரிவித்ததாகவும், அவ்வாறான முதலீட்டாளர்களைத் தொடர்புபடுத்தித் தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரமன்றி, தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.