மாவீரர் நினைவேந்தல் தொடர்பான பாடல்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் மூதூர் சம்பூர் பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 4 பேர் கைதாயிருந்தனர்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.