அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்திய முகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில், உள்ளிட்ட தமிழ்ப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்ட்டுள்ளதுடன் பரவலான வீதி ரோந்து நடவடிக்கைளும் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.