January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேஸ்புக்கில் பிரபாகரன் தொடர்பான தகவல்களை பகிர்ந்த நால்வர் மட்டக்களப்பில் கைது!

இலங்கையில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்த நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் நால்வரும் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்களின் ஊடாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.