January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் போட்டியில் சென்னை வென்றது!

Photo: twitter/Chennai Super Kings

ஐபிஎல் – 2024 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பில் அனுஜ் ராவத் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

சென்னை அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நேற்றையப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

தொடர்ந்து, 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா பெரும் பங்காற்றியிருந்தார். முதல் முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் அவர் அதிரடியாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.

வெறும் 15 பந்துகளில் மூன்று நான்கு ஓட்டங்கள், மூன்று ஆறு ஓட்டங்கள் அடங்களாக 37 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியிருந்தார்.

இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ஓட்டங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.