May 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் ‘லால்சலாம்’ டிரெய்லர்: ”யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன்”

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால்சலாம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதேவேளை இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லைக்கா தயாரிப்பில், ஏ.ஆர். ரஹுமான் இசையில் உருவாகியுள்ள ‘லால்சலாம்’ வருகின்ற 09ஆம் திகதி வெளிவரவுள்ளது.

அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ள இதன் டிரெய்லரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.