இந்த ஆண்டு நடைபெறவுள்ள எல்.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட 40 வயதான ஜெஹான் முபாரக், 2002 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக் கொண்டார்.
இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர், 13 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 16 டி-20 போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் 2015 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற அவர், இலங்கையின் உள்ளுர் கழகங்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கெட் அணி மற்றும் வோல்டர் போலோ விளையாட்டின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இம்முறை எல்.பி.எல் தொடரில் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திலின கண்டம்பியும், தலைவராக திசர பெரேராவும் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.