January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: பிளே – ஒப் சுற்று இன்று முதல் ஆரம்பம்

ஐ.பி.எல் 2021 சீசனின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுமுன்தினம் நிறைவுக்கு வந்ததுடன், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே – ஒப் சுற்றுக்கு முன்னேறின.

இதன்படி, பிளே – ஒப் சுற்றில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறும். இதில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி – சென்னை ஆகிய அணிகள் இன்று (10) துபாயில் நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் (Qualifier) மோதவுள்ளன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்த பெங்களூர் – கொல்கத்தா அணிகள் நாளை (11) சார்ஜாவில் நடைபெறும் எலிமேனேட்டர்  (Eliminator) போட்டியில் மோதும்.

இதையடுத்து அக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் 2 ஆவது குவாலிபையர் போட்டியில் முதல் குவாலிபையரில் தோல்வியடைந்த அணியும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றியீட்டிய அணியும் மோதும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

எனவே, ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் ஐ.பி.எல் 2021 சீசனின் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சம்பியன் பட்டத்தை வெல்லும்.