2021 ஆம் ஆண்டுக்குரிய ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் டுபாயில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வந்து 14 ஆவது ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக கால வரையறையின்றி பிற்போடப்பட்டது.
இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை டுபாயில் நடத்த தாம் தீர்மானித்ததாக இந்திய கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்குரிய ஐபிஎல் தொடரில், 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்தே, போட்டிகளை இடைநடுவே நிறுத்தப்பட்டன.
ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ளன.