பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி, இன்று அதிகாலை டாக்காவுக்கு பயணமானது.
இலங்கை அணி, பங்களாதேஷ் அணியுடன் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது
இந்தத் தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கு, குசல் ஜனித் பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், குசல் மெண்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.
அத்துடன், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த பல இளம் வீரர்களுக்கு இலங்கை ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி, எதிர்வரும் 23 ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது.
அத்துடன், ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன் எதிர்வரும் 21 ஆம் திகதி பயிற்சிப் போட்டியொன்றிலும் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.