தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடரை 2-1 எனும் ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், நேற்று லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டி தொடரைத் தீர்மானிப்பதாய் அமைந்திருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சார்பாக டேவிட் மிலர் 7 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 85 ஓட்டங்களை விளாசினார்.
தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக அனைத்து வீரர்களும் தமது பங்களிப்பை சிறப்பாக வழங்கி வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.
மொஹமட் ரிஸ்வான் 42 ஓட்டங்களையும், பாபர் அசாம் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஹசன் அலி 7 பந்துகளில் 20 ஓட்டங்களை விளாச, பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
இதனடிப்படையில், போட்டித் தொடர் 2-1 என பாகிஸ்தான் வசமாகியுள்ளது.
மொஹமட் நவாஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும், மொஹமட் ரிஸ்வான் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Player of the series Mohammad Rizwan!#PAKvSA | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/S9fX2Z1Kt9
— Pakistan Cricket (@TheRealPCB) February 14, 2021