January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்காம் சுற்றில் செரீனா, முகுருசா

Photo: ausopen.com

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நான்காம் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இதற்கான போட்டியில் அவர் ரஷ்யாவின் அனஸ்டாசியா பொடபோவாவை வென்றார்.

போட்டியில் மிகுந்த சவாலுக்கு பின்னர் 7-6, என செரீனா கைப்பற்றினார். இரண்டாம் செட் 6-2 என அவர் வசமானது.
அதன்படி 2-0 என வெற்றியீட்டிய செரீனா தனது 24 ஆவது டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கி முன்னேறுகின்றார்.

இதேவேளை,ஸ்பெய்னின் கார்பின் முகுருசா மற்றொரு மூன்றாம் சுற்றுப் போட்டியில் கஸகஸ்தானின் ஜரீனா தியாஸை எதிர்கொண்டார். போட்டியில் 6-1,6-1 எனும் நேர் செட்களில் வெற்றியீட்டிய முகுருசா நான்காம் சுற்றை உறுதிசெய்துகொண்டார்.