October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் ஆபிரிக்காவுக்கு சவால் விடும் பாகிஸ்தான் வீரர்கள்

தென் ஆபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆரம்பமாகியுள்ளது.இந்த ஆட்டத்தில் முதிகளில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆட்டத்தை ஆரம்பித்த உடனேயே 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இம்ரான் பட், ஆபிட் அலி, அசார் அலி ஆகியோர் சொற்ப நேரத்தில் களத்தைவிட்டு அகன்றனர். ஆனாலும், அணித்தலைவர் பாபர் அசாமும், பவாட் ஆலமும் 123 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பவாட் ஆலம் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணித்தலைவர் பாபர் அசாம் அரைச்சதமடித்தார். ஏனையோரில் ஹசன் அலி, யசீர் சஹா, நவ்மன் அலி ஆகியோர் தலா 8 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

பின்வரிசையில் பஹீம் அலி 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியை மேம்படுத்தினார். பாகிஸ்தான் அணி 272 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸில் நடையைக் கட்டியது.

பந்துவீச்சில் அன்ரிச் நோட்ஜி 5 விக்கெட்டுகளையும், கேஸவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலளித்தாடும் தென் ஆபிரிக்காவும் ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. டீன் எல்கர், வென்டர் டஸன் ,பெப் டு பிளெசி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எய்டன் அக்ரம் 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

தென் ஆபிரிக்க அணி 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.