இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் டெஸ்ட் வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் வீரர்களுக்கு நேற்று பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சுகாதார நிபுணர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காட்டவில்லை என்றும் தான் தற்போது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் லஹிரு திரிமான்ன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Hi guys got the news that I’m positive for covid 19. I have got zero symptoms and I still don’t know where I infected the virus. But I have been informed authorities necessary details to prevent it going to others. Stay safe people. ✌️🙏
— Lahiru Thirimanna (@thiri66) February 3, 2021
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், தலைமை பயிற்றுவிப்பாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அணிக்கு மிகவும் சவாலாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.