January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியை வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாபிரிக்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதில் தென்னாபிரிக்கா அணி சார்பில் டீன் எல்கர் 58 ஓட்டங்களையும், ஜார்ஜ் லிண்டே 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இரு வீரர்களின் ஓட்டங்களும் துடுப்பாட்டத்தில் தடுமாறிய தென்னாபிரிக்கா அணிக்கு மிகவும் வலு சேர்த்தது.

இதேவேளை பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் யஸீர் ஷா 3 விக்கெட்களையும் நுமான் அலி மற்றும் சஹீண் அப்ரிடி 2 விக்கெட்களையும் ஹஸன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

அந்நிலையில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

13 வருடங்களுக்குப் பின் தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.

இதில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

இந்நிலையில் இறுதியாக 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்ற காணொளி காட்சியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.