மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பக்கசார்பு உறுப்பினர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக வெளியேறினால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் அமீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து உருவான அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் அமீருக்கு 26 வயதே ஆகின்றது. எனினும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அவர் திடீரென அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு முழு கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.
ஆனாலும், அதற்கான காரணத்தை தற்போது அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் தனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்ததாக மொஹமட் அமீர் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் முழுமையாக மாற்றப்பட்டால் தாம் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வத்துடன் இருப்பதாக மொஹமட் அமீர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், போலியான வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் மொஹமட் அமீர் கேட்டுக்கொண்டுள்ளார்.