January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கால்விரல்கள் முறிந்தும் 21 ஓவர்களை வீசிய வேக்னர்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கால்விரல்கள் முறிந்த நிலையிலும் 21 ஓவர்களை வீசிய நீல் வேக்னர் அணிக்காக தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மௌன்ட் மவ்கனியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்த நியூஸிலாந்து சார்பாக நீல் வேக்னர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகியுள்ளது.

நீல் வேக்னர் துடுப்பெடுத்தாடியபோது அவரது கால் விரல்களில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், நியூஸிலாந்து வெற்றிபெற வேண்டும் என்பதால் முதல் இன்னிங்ஸில் 21 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸில் காயத்துடன் 28 ஓவர்களை நில் வேக்னர் வீசியிருந்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியை மயிரிழையில் வெற்றிகொள்வதற்கு நியூஸிலாந்து வீரர்களின் அர்ப்பணிப்பே காரணமாகியுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த நான்கைந்து வாரங்களுக்கு நீல் வேக்னர் ஓய்வில் இருக்க வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த போட்டிக்கான நியூஸிலாந்து குழாத்திலிருந்து நீல் வேக்னர் நீக்கப்பட்டுள்ளார்.