September 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர்: பகார் ஸமான் விலகல்

(Photo: Fakhar Zaman/ Facebook)

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வீரர் பஹார் ஸமான் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு விஜயம் செய்து 3 சர்வதேச இருபது 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  பாகிஸ்தான் அணி வீரர்கள் நியூஸிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே பயணமாகின்றனர்.

இதற்காக பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பஹார் ஸமானுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

எனினும், அவர் காய்ச்சல் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். பயணமாவதற்கு முன்பு காய்ச்சல் குணமடைய வாய்ப்பில்லை என்பதன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

பகார் ஸமான் பாகிஸ்தானில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் குணமடைந்த பின்னர் அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்படுகிறது.