September 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பாகிஸ்தான் அணியே பலம் வாய்ந்தது” – அணித்தலைவர் பாபர் அஸாம்

Photo: Babar Azam/ Facebook)

நியூஸிலாந்து அணியை விட தமது அணி பலம் வாய்ந்தது என பாகிஸ்தான் அணித்தலைவரான பாபர் அஸாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு விஜயம் செய்து இரண்டு டெஸ்ட் மூன்று சர்வதேச இருபது 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் விஜயம் தொடர்பாக கருத்து வெளியியிட்ட பாகிஸ்தான் அணித்தலைவரான பாபர் அஸாம், தமது அணி மிகவும் வலுவாக உள்ளது எனத் தெரிவித்தார்.

எந்தவொரு எதிரணியையும் தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் இந்தமுறை தமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் எங்களையும் நியூசிலாந்து அணியையும் ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் கிடையாது என்றார்.

மேலும், நியூஸிலாந்தையும் பாகிஸ்தானையும் திறமை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் பாகிஸ்தான் அணியே மேலோங்கிக் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.