January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? ( 15.11. 2020 – 13. 11.2021 )

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

 

தனுசு இராசியில் தனது சொந்த வீட்டில் குரு பகவான் மூலத்திரிகோணம் பெற்று ஆட்சிபெற்றிருந்தவர்.அத்துடன் சனியுடனும் கேதுவுடனும் இருந்து வந்தவர். இதனால் முழுபலனை குரு பகவான் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது மீண்டும் குருபகவான் தனுசு இராசியிலிருந்து நவம்பர் 15 ஆம் திகதி முதல் மகர இராசியில் நீசமடைந்துள்ளார்.

மகர இராசியில் நீசமடைந்த குரு ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 13 வரை அதிசாரம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். அதன் பின்னர் கும்ப இராசியிலிருந்து செப்டெம்பர் 13 இல் இருந்து மீண்டும் மகர இராசிக்கு வந்து நவம்பர் 13 இல் இருந்து அங்கு நீச குருவாக சஞ்சாரம் செய்வார்.

நீச குருவானவர் இடப இராசிக்கும் துலா இராசிக்கும் மகர இராசிக்கும் நன்மையாக அமைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)

மேஷ இராசிக்கு 10 இல் குரு வருகின்றார். மேஷ இராசிக்கு குரு தீமை செய்யாது. 10 இல் குரு வந்தால் பதவி போய்விடும் என்பர். ஆனால் இந்தப் பெயர்ச்சியில் அவ்வாறு நடக்காது. காரணம் குருவும் சனியும் பரிவர்த்தனை பெறுகின்றனர்.

குருவின் வீடான தனுசுவில் சனி இருக்கும் போது சனியின் வீடான மகரத்திற்கு குரு வருகின்றது. டிசம்பர் 27 வரை குரு வீட்டில் சனி – சனி வீட்டில் குரு இடமாற்றம் பெறுவதால் அதன் பலன்களும் வித்தியாசப்படும். சனி தனது சொந்த வீடான மகரத்திற்கு வரும்போது மேஷத்திற்கு அது 10 ஆம் இடம்; அதாவது தொழில்ஸ்தானம்.

டிசம்பர் 27 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி இடம்பெறும். 10 இற்குரியவன் 10 ஆம் இடத்திலே வலுவான ஆட்சிபலம் பெறுவதால் தொழிலை பாதிக்காது. தொழில் விருத்தி வளர்ச்சியடையும். 10 ஆம் இடம் வலுப்பெறுகின்றது. ஆகவே பதவி உயர்வு கிடைக்கும்.

மேஷ இராசிக்கு 2, 4, 6 ஆகிய வீடுகளை பார்க்கின்றது. 2 ஆம் இடத்தை பார்ப்பதால் செல்வ செழிப்பு ஏற்படும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்தஸ்த்து , செல்வம் , புகழ் போன்றவற்றை அதிகரிக்க செய்யும்.

குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டிருந்தால் மீண்டும் சேர்வார்கள். குடும்பத்தில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளும் இந்த குரு பெயர்ச்சி மூலம் தீரவிருக்கின்றது. 4 ஆம் இடமான சுகஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நோய்நொடியின்றி இருப்பீர்கள்.

வண்டி , வாகன யோகம் ஏற்படும். சொந்த வீட்டிற்கு புலம்பெயரும் நேரம் வந்துவிட்டது. சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள். தாயாரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 6 இடத்தைப் பார்ப்பதால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

நோய் நொடிகளிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கு தீர்ப்புக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குரு 10 ஆம் இடத்தில் நீசம் பெற்றாலும் கூட நல்ல பலன்களையே கொடுக்கும். திருமண தடை நீங்கும்.

 தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிரிகள் தொல்லை காணப்படாது. மனதிலே மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாழக்கிழமைகளில் சிவன் கோவில்களில் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வது நன்மையாக அமையும்.

 

 

 

(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)

சுக்கிரனுடைய வீடுகள் இடபம் , துலாம். சுக்கிரனுடைய வீடுகளை இராசியாகவோ இலக்னமாகவோ கொண்டவர்களுக்கு குரு நன்மை செய்யாது. இந்த குரு பெயர்ச்சியை பொறுத்தவரையில் குரு இடப ராசிக்கு தீமை செய்யாது நன்மையே செய்யும்.

8, 11 ஆகிய வீடுகளுக்கு அதிபதியான குரு மகர இராசிக்கு சென்று நீசமடைகின்றது. அகவே இடப இராசிக்கு நன்மையே செய்யும். 9 இல் குரு உங்களுக்கு 80 சதவீதம் நன்மையே செய்யும். காரணம் 8 இற்குரியவன் நீசம் பெறுகிறான்.

அத்தோடு இடப இராசிக்கு அஷ்டமத்து சனி முடிகின்றது. டிசம்பர் 27 சனிப் பெயர்ச்சியின் பின்னர் 8 இல் இருந்த சனி 9 ஆம் இடத்துக்கு வருவதால் 100 சதவீத நன்மை உங்களுக்கு ஏற்படும். குரு 3, 5 ஆம் இடங்களை பார்க்கின்றது. 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சகோதர சகோதரிகளிடம் நல்லிணக்கம், நல்லுறவு ஏற்படும்.

5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குழந்தை உள்ளவர்களுக்கு பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம், கல்வி மேம்படும். வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணங்கள் ஈடேறும். இராசியை குரு பார்ப்பதால் வியாழ நோக்கு வந்துவிட்டது.

திருமணமாகாத இடப இராசியினருக்கு திருமணம் நடைபெறும். அனைத்து விதமான தேவைகளும் நிறைவேற்றப்படும் சிறப்பான காலமாகும். குருவாயூரப்பனை வழிபாடு செய்வது நன்மையாக அமையும்.

 


 

 

(மிருகசீரிடம் 3 ஆம், 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம்,3 ஆம் பாதம்)

இந்த குருப்பெயர்ச்சியில் குரு 8 ஆம் இடத்திற்கு வருகின்றது. ஆகவே உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். கடன் வாங்க நேரிடும். இருப்பினும் ஜனன கால ஜாதகத்தில் நல்ல தசாபுத்தி இருந்தால் இந்த குருப்பெயர்ச்சி பெரியளவில் உங்களை பாதிக்காது.

கோச்சார ரீதியாக நன்றாக இல்லை என்றாலும் ஜனன கால ஜாதகம் வலுவாக இருந்து அதிலே நல்ல தசைகள் நடைபெற்றுகொண்டிருந்தால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. குருவும் சனியும் 8 ஆம் இடத்திற்கு வருவதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது.

முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. புதிய முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்படும். இதனால் உறவுகளில் முறிவு ஏற்படும். கடன் வாங்குதல், கொடுத்தலை தவிர்த்தல் நல்லது. எந்த செயலை செய்தாலும் அதனை அதிக அக்கறையுடனும் பாதுகாப்புடனும் செய்வது நன்று.

வேலைக்காகவோ வியாபாரத்திற்காகவோ வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். செய்யும் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வேலைபார்க்கும் இடங்களில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வேலை பார்க்கும் இடங்களில் மனவுளைச்சல்கள் ஏற்படும்.

சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். அதிசாரகதியில் குரு 9 ஆம் இடத்திற்கு சென்று திரும்பும் 5 மாத காலத்தில் சற்று நிம்மதி ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவாது. குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்று. உங்கள் இராசிக்கு ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து செம்டெம்பர் 13 ஆம் திகதிவரை நீசமடைந்த குருவுடன் மகர இராசியில் ஆட்சியான சனி இருப்பது நீசபங்க இராஜயோகத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

கடக இராசிக்கு குரு பொதுவாக நன்மையே செய்யும். கடக இராசிக்கு 9 ஆம் இடத்திற்கு அதிபதி குரு. கடகம் என்பது குரு உச்சம் பெறும் வீடு. ஆகவே குரு நன்மை தான் செய்யும். கடந்த ஒரு வருடமாக 6 ஆம் இடத்தில் குரு ஆட்சிபலம் பெற்றிருப்பதால் 6 ஆம் இடம் வலுப்பெற்றிருக்கின்றது.

6 ஆம் இடம் என்பது ருணம் ,ரோகம் , சத்ரு இவர்களை குறிக்கும் இடம். இப்பொழுது குரு 7 ஆம் இடத்திற்கு வருகின்றது. 7 ஆம் இடத்தில் குரு அமர்ந்து கொண்டு இராசியைப் பார்க்கப்போகின்றார். அத்தோடு 11 , 3 ஆம் இடங்களை பார்க்கின்றது. இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல கிரக நிலவரம் வருகின்றது.

ஆகவே, கடவுள் உங்களுக்கு யார் மூலமாவது நல்ல விடயங்களை செய்து கொடுப்பார். நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவை அனைத்தும் யார் மூலமாவது நடக்கும். முக்கியமாக திருமணமாகாத கடக இராசியினருக்கு திருமணம் நடக்கும்.

திருமண தடை நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் தேவைக்கு அதிகமாகவே பணவரவு இருக்கும். செய்யும் தொழிலில் உயர்நிலையை அடைவீர்கள். பணத் தட்டுப்பாடு இருக்காது. பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் வலிமை, மனோபலம் ஏற்படும். முகப்பொலிவு ஏற்படும்.

 


 

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

சிம்ம இராசிக்கு குரு பெயர்ச்சி சராசரியாக இருக்கும். 5 இற்குடையவன் 6-ம் இடத்தில் மறைவது அவ்வளவு சிறப்பாக இல்லை. 6 ஆம் இடத்தில் மறைவு பெறுவது மட்டுமல்லாது குரு புண்ணியஸ்தானாதிபதி 6 ஆம் இடத்தில் நீசமடைகின்றது.

அதேநேரம் அஷ்டமாதிபதியாகிய 8 இற்கும் அதிபதியான குரு 6 ஆம் இடத்தில் நீசமடைவதால் யோகம்.  5 இற்குடையவனாக இருந்து செய்ய வேண்டிய நன்மைகளை குரு செய்துகொண்டிருக்கின்றது. இந்த குரு பெயர்ச்சியில் 6 ஆம் இடமான மறைவுஸ்தானத்திற்கு சென்று பலவீனமடைகின்றது.

இந்த குரு பெயர்ச்சியை பொறுத்தவரை சிம்ம இராசிக்கு நன்மைகள் மெதுவாக நடக்கும், அதிகளவில் எதிர்பார்க்க முடியாது. தீமைகள் அதிகளவில் நடக்காது. அவரவர் ஜனன ஜாதகத்தின் தசாபுத்தியை பொறுத்து பலன் மாறும். இருப்பினும் எந்தவிதத்திலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

ஆரோக்கியத்தில் பாதிப்பு எற்படாது. தற்போது பாதிப்பிருந்தால் அது சரியாகிவிடும். பொருளாதார ரீதியாக எந்த பிரச்சினையும் ஏற்படாது. தேவையான பணவரவு நிச்சயமாக இருக்கும். சேமிப்பும் ஓரளவு கைக்கொடுக்கும். குடும்பம் நன்றாக இருக்கும். திருமணம் செய்யலாம்.  திருமணம் நடக்கும். சிம்ம இராசியில் கேது திசை நடைபெறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 


 

(உத்தரம் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

உங்கள் இராசியை பொறுத்தவரை 5 ஆம் இடத்திற்கு ஒவ்வொரு முறையும் குரு வரும்போது ஒரே மாதிரியான பலன் கொடுக்காது. அந்த நேரத்தில் சனி, ராகு, கேது இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கொடுக்கும். இம்முறை கன்னி இராசிக்கு 5 ஆம் இடமாகிய பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு குரு வருகின்றது.

4 ஆம் இடமாகிய தனுசிலே இப்போது ஆட்சிபலம் பெற்றிருக்கின்ற வியாழன் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி இரவு நகர்ந்து 5 ஆம் இடத்திற்கு வருகின்றது. கன்னி இராசிக்கு 5 ஆம் இடத்துக்கு குரு வரும்போது அங்கு நீசமடைந்து அதனுடைய பலம் குறைவடைகின்றது.

இராசியை குரு பார்ப்பதால் நன்மை. 4, 7 க்குடையவன் 5 ஆம் இடத்திலே நீசமடைவது சிறப்பித்து கூறக்கூடிய விடயமுமல்ல. அதேவேளை பயப்படக்கூடிய விடயமுமல்ல. பார்வை கன்னி இராசியில் படுவது பெரிய பலம். கன்னி இராசிக்கு குரு பார்வை கிடைக்கப்போகின்றது.

5 ஆம் இடத்தில் குரு நீசமடைந்திருந்தாலும் குரு தான் செய்யவேண்டியதை பார்வை மூலமாகவே செய்துவிடும்.  9 ஆம் , 11 ஆம் இடத்திற்கு குரு பார்வை இராசிக்கு குரு பார்வை கிடைகின்றது. ஆகவே கன்னி இராசிக்கு இது ஒரு பெரிய பலம். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருப்பின் அவற்றில் இப்போது சிறப்படைவீர்கள். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். சேமிப்பு பழக்கம் அதிகரிக்கும். கல்வி , உத்தியோகம், சுயதொழில் , வியாபாரம், ஆரோக்கியம் , குடும்ப உறவுகள் , திருணம பிரார்த்தம், குழந்தை பாக்கியம் என்பன நன்றாக இருக்கும்.

(சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

குரு வலுவாக இல்லாமல் நீசதானத்திற்கு செல்கின்றது. 6 இற்குடையவர் 4 ஆம் இடத்திலே நீசமடைகின்றார். துலா இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி நன்றாக இருக்கின்றது.

டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.

டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும். பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால் அதற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். எந்த நோய்நொடியும் இல்லாமல் பலமாக இருப்பீர்கள். வழக்குகள் நிலுவையாக இருந்தால் அது முடிவடைந்து நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரும்.

அசையா சொத்துக்களை புதிதாக புதிய இடங்களிலும் உயரமான இடங்களிலும் வாங்குவதற்கான வாய்ப்பு இப்போது உங்களுக்கு இருக்கின்றது.

எதிரி கிடையாது. பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரியங்கள் இடம்பெறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இடம்பெறும். வியாபாரத்தில் மந்தமான நிலை ஏற்பட்டிருந்தால் அவை இப்பொழுது மாறிவிடும்.

நல்ல இலாபத்துடன் வியாபாரத்தை தொடர்ந்தும் நடத்திசெல்வீர்கள். புதிதாக வியாபாரத்தை தொடங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை , அணிகலன்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

வேலைபார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக இராசியின் வளர்ச்சியில் குருவின் பங்கு கணிசமானது. டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.

டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும். பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும்.

விருச்சிக இராசிக்கு 2 , 5 ஆம் வீடு குருவின் வீடு. 2 , 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 2 ஆம் இடம் என்பது தனஸ்தானம் அதாவது தனம், வாக்கு, குடும்பம், செல்வாக்கு , சொல்வாக்கு.

5 ஆம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம் அதாவது பதவிஸ்தானம் , புத்திரஸ்தானம், புகழ், செல்வம். 5இற்குடையவன் 3 ஆம் இடத்தில் நீசம், 2இற்குடையவன் 3 ஆம் இடத்தில் நீசம். குரு, சனி பர்வர்த்தணை காரணமாக பெரியளவில் தீமை செய்யாது.

7 ஆம் இடமான களஸ்திரதானம் குரு பார்க்கப்போகிறது. திருமணமாகதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். 9 ஆம் இடமான பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால் எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும்.

தந்தைக்கு யோகம் அதேபோன்று தந்தை வழி உறவினர்களால் நன்மை. தந்தைவழி சொத்து கைக்கு வரும். அதில் பிரச்சினைகள் இருந்தாலும் அவை சரியாகிவிடும்.

11 ஆம் இடமான இலாபஸ்தானத்தை குரு பார்க்கிறது. குருவின் பார்வையே உங்களுக்கு நன்மை செய்கின்றது. செல்வம் , புகழ் உண்டாகும். தனம் கிடைக்கும். முருக வழிபாடு விருச்சிக இராசியினருக்கு மிக முக்கியமானது.

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

குருவுக்குரிய இராசி தனுசு. குரு தனுசு இராசியிலிருந்து வெளியேறுகிறார். இராசி அதிபதி பலவீனமாகி நீசமடைகின்றது. நன்மை செய்யாது என்றாலும் குரு, சனி பரிவர்த்தணை பெறுகின்றது.
டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே. டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும்.
பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும். சனியின் வீட்டில் குரு இருக்கப்போகிறது. குருவின் வீடான தனுசிலே சனி இருக்கப்போகின்றது.
2 ஆம் இடத்தில் குரு சனி சேர்ந்தால் செவி , கண், பல் , தொண்டை ஆகியவற்றில் பிரச்சினை ஏற்பட்டு வைத்தியரை நாட வேண்டிவரும்.
முகத்தில் உள்ள ஏதோவொரு அங்கம் பாதிப்பட்டு அதிலே நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்படும். தசாபுத்தியை பொறுத்து பாதிப்பு குறைவடையலாம். 6 ஆம் இடத்தை குரு பார்க்கிறது. கடன் பிரச்சினை தீரும்.
8 ஆம் இடத்தை குரு பார்க்கிறது ஆகவே ஆபத்து எதுவும். இருக்காது. அதேபோன்று 10 ஆம் இடத்தை குரு பார்க்கிறது. எனவே, தொழில் நன்றாக இருக்கும். வியாபாரம் , உத்தியோகம், சுயதொழில் எதுவாக இருந்தாலும் அவற்றில் வளர்ச்சியடைந்து அதன் மூலம் பணம் கிடைக்கும்.
2 ஆம் இடத்தில் இருக்கும் குரு 10 ஆம் இடத்தை பார்த்து உங்களுக்கு செல்வத்தை வரவழைக்கும். மிகபெரிய சாதனைகளை படைக்கப்போகின்றீர்கள்.
திருமணம் தாமதமாகிய தனுசு இராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணமாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

குரு உங்கள் இராசிக்குள் வந்து நீசமடைகின்றது. நன்மை செய்யாத கிரகமான குரு நீசமடைகின்றது. நன்மை செய்யாத கிரகம் பலவீனமாக இருக்கின்றது.

ஆகவே உங்களுக்கு நன்மை. டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.

டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும்.

பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும். இராசியிலே குரு இருக்கும் போது 5 , 7 , 9 ஆம் இடத்தை பார்க்கும். இது உங்களுக்கு நன்மை செய்யும். மகர இராசிக்கு குரு நன்மை செய்யாது என்றாலும் அதன் பார்வை நன்மை செய்யும். 5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.

உயர் பதவிகள் கிடைக்கும். 7 ஆடம் இடத்தை குரு பார்ப்பதால் உங்கள் மனைவிக்கு யோகம். திருமணமாகாத மகர இராசியினருக்கு திருமணமாகும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் இல்வாழ்க்கை துணைக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

9 ஆம் இடம் வலுப்பெறுவதால் தந்தைக்கு யோகம். தந்தைவழி உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். தந்தையால் நன்மை உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

அனைத்துவிதமான பாக்கியங்களும் உங்களை தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தளர்வை ஏற்படுத்தும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அதனூடாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய பொருளாதார இலாபமும் கிடைக்கும்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம்,3 ஆம் பாதம்)

உங்கள் இராசிக்கு குரு 12 ஆம் இடத்திற்கு வந்து நீசமடைகின்றது. உங்கள் இராசிக்கு குரு கிரகம் நன்மை செய்யாது என்றாலும் குருவின் பார்வை நன்மையே செய்யும். 

டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.

டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும்.

பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும். 4, 6 , 8 ஆகிய இடங்களை பார்க்கின்றது. 4 ஆம் இடத்தை பார்ப்பதால் சொந்த வீடு வாங்குவீர்கள்.

பழைய கடனை அடைத்து விட்டு இப்பொழுது புதிய வீட்டு கடன் வாங்குவீர்கள். 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உங்களுக்கு தீமை எதுவும் நடக்காது.

6 ஆம் இடத்தை பார்ப்பதால் கடன் தொல்லைகளிலிருந்து வெளிவந்துவிடுவீர்கள்.  ஆனால் புதிதாக கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எதிரிகள் இல்லை. தொழில் நன்றாக நடைபெறும். நீங்கள் சிறியதொரு வியாபாரம் செய்துகொண்டிருப்பீர்களாயின் அது இப்பொழுது சிறப்பாக இருக்கும். பணவிரயம் ஏற்படாது.

வருமானம் நிச்சயமாக அதிகரிக்கும் (தனஸ்தானாதிபதியாக இருந்தாலும் விரயஸ்தானத்திற்கு அவர் வந்தால் விரயத்தை ஏற்படுத்தாது தனத்தைதான் கொடுக்கும்).

மறைமுகமாக நன்மைகள் செய்யும். பொருளாதாரத்தில் வளர்ச்சியைதான் ஏற்படுத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தாது. திருமணம் நிச்சயமாகும். உயர் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

வேலை தேடுபவர்கள் இப்பொழுது நல்ல வேலையில் சேரப்போகின்றீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் இடம்பெறும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)
மீன இராசிக்கு அதிபதி குரு. அந்த குரு இப்பொழுது 10 ஆம் இடத்திலிலிருந்து 11 ஆம் இடத்திற்கு வருகின்றது. இராசிக்கும் 10 க்கும் அதிபதியான குருபகவான் 11 ஆம் இடமாகிய மகர இராசியில் நீசமடைகின்றார்.
11 ஆம் இடத்தில் குரு நன்மை செய்யும். டிசம்பர் 27 வரை சுமார் 40 நாட்கள் சனி வீட்டில் குருவும் குரு வீட்டில் சனியும் பரிவர்த்தணா யோகம் பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.
டிசம்பர் 27 முதல் ஏப்ரல் 5 வரை மகர இராசியில் ஆட்சி பெற்ற சனியுடன் நீசமடைந்த குரு இருப்பது நீசபங்க இராஜயோகமாகும்.
பின்னர் செப்டெம்பர் 13 இல் இருந்து நவம்பர் 13 வரை நீசபங்க இராஜயோகம் தொடரும். உங்கள் விருப்பங்களை இறைவன் நிறைவேற்றிவைக்கும் அற்புதமான நேரம்.
உங்களுடைய தொழில் வளர்ச்சியடையும். தொழிலிலுள்ள தடைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும், திருப்தி ஏற்படும்.
சுயதொழில் செய்பவர்களுக்கு அற்புதமான நன்மைகள் இடம்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு உங்களை தேடிவரும். மகிழ்ச்சியான நல்ல சூழ்நிலையிலே நீங்கள் இருப்பீர்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். எடுத்த காரியத்தை நடத்தி காட்டுவீர்கள். நீங்கள் அடைய நினைக்கும் அனைத்தையும் அடைந்துவிடுவீர்கள். உங்கள் இராசிக்கு குரு 3, 5, 7 ஆம் இடங்களை பார்க்கின்றது. 3 ஆம் இடத்தை பார்ப்பதால் உடன் பிறப்புக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
5 ஆம் இடத்தை பார்ப்பதால் உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணமாகாதிருந்தால் தற்பொழுது திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.
7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இளவயதினருக்கு திருமணமாகாதிருந்தால் திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.