January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (01. 11. 2020– 07. 11. 2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா (இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

சிம்ம இராசியிலிருந்து சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி இராசி சுக்கிரனுக்கு பலம் குறைந்த வீடாகும்.அதாவது நீச்ச வீடாகும்.

உங்கள் இராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்கிரன். உச்சம் பெற்ற புதனோடு சுக்கிரன் சேர்வதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.

எனவே அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.  வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 1, 2

(கார்த்திகை 2 ஆம்,3ஆம்,4 ஆம் பாதம் ரோகினி)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். சுக்கிரன் கன்னி இராசியில் நீச்சமடைகின்றார்.

ஆனால் உச்சம் பெற்ற புதனோடு சேர்ந்திருப்பதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது. எனவே பணவரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் ஏற்படும். பிள்ளைகளால் நீங்கள் பெருமையடைவீர்கள்.

அவர்களது கல்வியும் உயர்வடையும். அத்துடன் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மையான காரியங்கள் நடக்கும். அத்துடன் மாமன், மைத்துனர் வழி ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 5, 6

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். கன்னி இராசியில் சுக்கிரன் நீச்சமடைகின்றார்.

அத்தோடு கன்னி இராசி உச்சமடைந்த புதனோடு சேர்வதால் நீசயோக இராஜபங்கம் ஏற்படுவதால் நல்ல சந்தர்ப்பங்கள் உங்களுக்கு ஏற்படும். அதனை கைநழுவ விடாதீர்கள்.

மேலும் உங்களுக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்கிரன். எனவே பிள்ளைகளின் கல்வி வாழ்க்கையும் சிறப்பாக அமையும். அவர்கள் உங்களுக்கு பெருமையைத் தேடி தருவார்கள்.

பூர்வீக சொத்துக்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை சுமூகமாக நீங்கிவிடும். வெளிநாட்டில் உள்ளவர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 1, 2

(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

உங்கள் இராசிக்கு இதுவரையில் சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அங்கு அவர் நீச்சமடைந்திருக்கிறார்.

அதேவேளை கன்னி இராசியிலுள்ள உச்சம்பெற்ற புதனோடு சேர்ந்து நீச்சபங்க இராஜயோகத்தையும் உங்களுக்கு தருகின்றார் .

எனவே நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும் வாகனங்கள் வாங்குவதிலும் விருப்பம் காட்டுவீர்கள்.

மேலும் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் இடம்பெறும். அத்துடன் வெளிநாட்டு தொடர்புகளும் உங்களுக்கு ஏற்படலாம். மாமன்மார், மைத்துனர் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும். வீட்டில் குதூகலமான சம்பவங்களும் நிகழும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 3, 4

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். கன்னி இராசியில் சுக்கிரன் நீச்சமடைகின்றார்.

என்றபோதிலும் கன்னி இராசியிலுள்ள உச்சம்பெற்ற புதனோடு சேர்ந்திருப்பதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.

தன இலாபதிபதியான புதன் உச்சம்பெற்றிருக்கும் போது பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் உங்களுடைய வியாபாரமும் சிறப்பாக நடக்கும்.

அத்துடன் வங்கியிலும் உங்ளுடைய வைப்பு உயரும். வீட்டில் மங்களகரமான காரியங்கள் கைக்கூடிவரும். மேலும் புதிய நட்புகள் உங்களுக்கு நன்மையாக அமையும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 1, 2

(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிரன் இப்போது கன்னி இராசியில் அதாவது உங்களது இராசியிலேயே சஞ்சாரம் செய்கின்றார். அங்கு சுக்கிரன் நீச்சமடைகின்றார்.

அதேவேளையில் உங்கள் இராசிநாதனான புதன் உச்சமும் ஆட்சியும் பெற்று அவருடன் சுக்கிரன் சேர்வதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.

எனவே நீங்கள் எதிர்பாராத வெற்றிகளை கண்டுகொள்வீர்கள், மகிழ்ச்சியடைவீர்கள். மேலும் பங்குச்சந்தை வியாபாரமும் உங்களுக்கு சிறப்பாக அமையும். தொழில் ரீதியாகவும் உயர்வடைவீர்கள்.

புதிய ஒப்பந்தங்களும் உங்களை தேடி வரலாம். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வை எதிர்பார்க்கலாம். மனமகிழ்ச்சியடைவீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 2, 3

 (சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். சுக்கிரன் கன்னி இராசியில் நீச்சமடைகின்றார். அத்துடன் ஆட்சியும் உச்சமும் பெற்ற புதனோடு இணைந்து நீச்ச பங்க இராஜயோகத்தை உங்களுக்கு தருகிறார்.

மேலும் உங்களுடைய அதிபதி சுக்கிரன் நீசமடைந்தாலும் புதனுடன் சேர்ந்திருப்பது நன்மையே. நீச்ச பங்க இராஜயோகத்தை தருவதால் பொன், பொன்,பொருள் சேரக்கை ஏற்படும்.

புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியாகும். அத்துடன் தொழில்வளம் மேலும் மேன்மையடையும். அத்துடன் தேவையானவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். சுப விரயங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 3, 4

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். சுக்கிரன் கன்னி இராசியில் நீசமடைகின்றார்.

சுக்கிரன் நீசமடைந்தாலும் ஆட்சியும் உச்சமும் பெற்ற புதனோடு இணைவதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.

நீண்ட நாட்களாக தாமதித்த காரியங்கள் இப்பொழுது உங்கள் மனம்போல் எண்ணியவாறு ஈடேறும். மேலும் சொந்த முதலீடுகள் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

சுயதொழில் விருத்தியடையும். மேலும் பிள்ளைகளால் நீங்கள் பெறுமையடைவீர்கள். புதிய மங்களகரமான நிகழ்வுகள் வீட்டில் நிகழலாம். உங்களது முயற்சிகள் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 6 (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சரித்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். நீசமடைகின்றார். உங்கள் இராசிநாதன் தேவகுருவுக்கு சுக்கிரன் அசுரகுருவானவர். அத்துடன் பகை பெற்றவருமாவார்.

எனவே சுக்கிரன் நீசம் பெறுவது நன்மை என்று கூறவேண்டும். அதேவேளை தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் புதனோடு இணைவதால் ஆட்சியும் உச்சமும் பெற்ற புதனோடு இணைவதால் உங்களது உத்தியோக உயர்வு நிலையை அடைவதற்கான வழிகள் பிறக்கும்.

எதிர்பாராத விதத்தில் பதவி உயர்வு ஏற்படலாம். சொந்த தொழிலும் விருத்தியடையும். உங்கள் புதிய முயற்சிகளும் கைக்கூடும்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 7

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சரித்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அங்கு சுக்கிரன் நீசமடைகின்றார். ஆட்சியும் உச்சமும் பெற்ற புதனோடு இணைவதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.

அத்துடன் தர்மகர்மாதிபதி யோகமும் உங்களுக்கு கிடைக்கின்றது. மேலும் பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு நல்ல பதவியும் அந்தஸ்த்தும் கிடைக்கலாம்.

மேலும் தொழிலிலும் சிறப்படைவீர்கள். 7 ½ சனி இப்பொழுது நடைபெறுகின்றது. எனினும் பாதகமாக இல்லை. நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 1, 2

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

சிம்ம இராசியில் சஞ்சரித்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அங்கு சுக்கிரன் நீசமடைகின்றார். எனினும் ஆட்சியும் உச்சமும் பெற்ற புதனோடு இணைவதால் நீச்ச பங்க இராஜயோகம் ஏற்படுகின்றது.
உங்கள் இராசிக்கு சுகஸ்தானமான 4 ஆம் இடத்திற்குரியவரும் பாக்கியஸ்தானத்திற்குயரி; 9 ஆம் இடத்திற்குரியவர் சுக்கிரன் எனவே தாய் வழியினரின் உதவி கிடைக்கும்.
மேலும் புதிய முதலீடுகள் செய்வது நன்மையாக அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்களும் உங்களுக்கு ஏற்படும்.
அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 3, 4

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சிம்ம இராசியில் சஞ்சரித்துவந்த சுக்கிரன் இப்பொழுது கன்னி இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அங்கு சுக்கிரன் நீசமடைகின்றார். அதேவேளை உங்கள் இராசிநாதன் குருவானவர் தேவகுரு. அதேவேளை சுக்கிரன் அசுரகுரு.

இவை ஒன்றுக்கொன்று பகைக்கிரகமாக இருப்பவை எனவே சுக்கிரன் நீசமடைவது மீன இராசிக்கு நன்மைதான். எதிரிகள் தானகவே பணிந்துவிடுவார்கள். தடைகள் தானாக விலகிவிடும்.

மேலும் உச்சம் பெற்ற புதனோடு இணைந்து நீச்ச பங்க இராஜயோகமும் ஏற்படுகின்றது. எனவே இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அத்துடன் புதிய முயற்சிகளும் கைக்கூடிவரும். நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நாட்கள் – நவம்பர் 4, 5