January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ டீசர் வெளியீடு-

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் டீசர் வெளியீடப்பட்டுள்ளது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் சிம்புவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலமாக இணைந்துள்ளனர்.

நடிகரும் ‘மூக்குத்தி அம்மன்’ பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வழங்கும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஊரிலிருந்து, நகரத்தை நோக்கி வரும் சராசரி இளைஞன் சந்தர்ப்பவசத்தால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அடிதடி சண்டை என தெறிக்க விட்டிருக்கிறது இந்தப்படத்தின் டீசர்.

இதில் சிம்புவின் அலட்டல் இல்லாத எதார்த்தமான நடிப்பும் மிக மிக எதார்த்தமான படம் ஆக்கலும் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்தப்படத்திலும் பாடலாசிரியர் தாமரை தனது தனித்தன்மையை காண்பித்திருக்கிறார்.

ஏ.ஆர். ரகுமான் குரலில், பின்னணி இசையில் வெளிவந்துள்ள இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

‘மாநாடு’ மிகப்பெரிய வெற்றியை தந்ததுடன் சிம்புவின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த டீசர் வெளியாகி சிம்புவின் திரைப்பயணம் நான்கு கால் பாய்ச்சலில் அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.