June 11, 2025 22:07:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு!

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1,862.97 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை சந்தையில் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 109,200 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுணின் விலை 118,000 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.