July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் நாளிலேயே 34 கோடி ரூபாய் வசூலித்த ‘அண்ணாத்த’

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் அண்ணாத்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

திரையரங்குகள் முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆரவாரத்துடன் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ வெளியான முதல் நாளில் 34 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூல் செய்துள்ளது.

தர்பார், படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர்  நடித்துள்ளதுடன்  இமான் இசையமைத்துள்ளார்.

அதிலும் ‘அண்ணாத்த’ திரைக்கதை முற்றும் முழுவதுமாக குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இருந்ததால் தீபாவளியையொட்டி மக்கள் கூட்டத்தால் திரையரங்குகள் முழுவதும் நிரம்பியது.

அண்ணன், தங்கை பாசக் கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.