சமந்தா தமிழில் நடிக்கவுள்ள அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இறுதியாக தெலுங்கில் ‘சாகுந்தலம்’ திரைப்படம், தமிழில் ‘காற்றுவாக்கில் ரெண்டு காதல்’ திரைப்படம் ஆகியவற்றில் சமந்தா ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
இந்நிலையில், நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் முழு ஓய்வில் சமந்தா இருந்தார்.
அண்மையில் நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாகக் கூட்டாக அறிவித்தனர்.
இதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் சமந்தா செயற்பாட்டில் இருந்தார். இதற்கிடையே தான் நடிப்பதற்கான புதிய படக் கதைகளையும் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு சமந்தாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ‘ட்ரீம் வாரியர்’ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் என்பவர் இயக்கவுள்ளார். சமந்தாவுடன் நடிக்க உள்ள ஏனைய நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
We are happy to announce that @Samanthaprabhu2 is on board for our next! Directed by @Shantharuban87. #ProductionNo30 pic.twitter.com/aV4kyvlJ5Z
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 15, 2021