
நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னர் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு எப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்பது பலரது கேள்வியாகவும் ஆவலாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ஒரு சில காரணங்களால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இவர் தற்போது பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக நகைச்சுவை திரைப்படத்தில் நாயகனாக வடிவேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தை செப்டம்பர் மாதத்தில் தொடங்குவதற்கு சுராஜ் திட்டமிட்டுள்ளார்.
வடிவேலு – சுராஜ் இருவரும் ஏற்கனவே வெளியான தலைநகரம், மருதமலை ஆகிய படங்களில் பணியாற்றியிருந்தனர்.
இந்த படங்களில் வந்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் எல்லோராலும் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டது.
வடிவேலுவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஆகவே வெகு விரைவில் வைகைப்புயல் வடிவேலுவை ஒரு புதிய நகைச்சுவை திரைப்படத்தில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.