January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (20-09-2020 – 26-09-2020)

கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர பாபுசர்மா குருக்கள்
(இயக்குனர்-ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்) மேட ராசிக்கார்ர்களை கண்டு பிறர் பயப்படும் படியும் விளங்குபவர் நீங்கள் தான். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரை ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஆட்சி பெற்ற குரு பகவான் பார்வை படுவதால் குருமங்கல யோகம் ஏற்படுகின்றது. ஆறாமிடத்தில் சூரியனுடன் உச்சம் பெற்ற புதன் கூடி , புத -ஆதித்திய யோகமும் ஏற்படுகின்றது. இதனால் எடுக்கின்ற காரியங்கள் உங்கள் மனம் திருப்திப்படும் வரை நிறைவேறும் வாரமாகும்.

(கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி, மிருகசீரிடம் 1ஆம், 2ஆம் பாதம்) இந்த ராசியில் பிறந்தவர்கள் சுமாரான உயரமாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். உடற்கட்டு நன்கு அமைந்திருக்கும். உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 3ஆம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி புதன் கன்னியில் உச்சம் பெற்றிருக்கின்றார். உங்கள் 12ஆம் வீட்டுக்குரிய விரயாதிபதி செவ்வாய் சொந்த வீடான மேஷத்தில் பலம் பெற்றுள்ளார். தொழில் முன்னேற்றம், அரசாங்க உத்தியோக உயர்வு, விருப்பமான இடமாற்றம் ஏற்படலாம். வீடு, வாகனங்கள், சகோதரர்களால் செலவுகள் ஏற்படலாம்.

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்) எதையும் ரசித்து சுவைத்து சாப்பிடுவதில் நீங்கள் மிகவும் அலாதி பிரியமானவர்கள். உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் தன் சொந்த வீட்டில் தனுசு ராசியிலிருந்து குரு பலம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கின்றார். புதனும், சூரியனும் சுகஸ்தானத்தில் (4ஆம் இடம்) சஞ்சரித்து புத -ஆதித்திய யோகத்தை ஏற்படுத்தியுள்ளார். லாபாதிபதி செவ்வாய் 11ஆம் இடமான லாபதானத்தில் சஞ்சரிப்பதால் இவ்வாரம் மகாலட்சுமியின் அனுக்கிரகம் ஏற்படும். சிறப்புமிக்க வாரமாக அமைகிறது.

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்) கடக ராசிக்காரர்கள் எதையும் ரசித்து அனுபவிப்பதில் திறமை பெற்றவர்கள் என்றால் மிகையாகாது. உங்கள் ராசிக்கு யோகத்தினை அள்ளித்தரும் கிரகமான செவ்வாய், 10ஆம் இடமான தொழில் ஜீவன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். மேலும் தொழில் சிறப்புறும். அத்துடன் சகாயஸ்தானமான மூன்றாமிடத்தில் புதனும் சூரியனும் இணைந்து புத -ஆதித்திய யோகம் ஏற்படுவதால் உடன் பிறந்த இளைய சகோதரர்கள் இடையே பரஸ்பர உறவு மேம்படும்.

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்) பொதுவாகச் சொன்னால் சிம்ம ராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை பெற்றவர்கள். உங்கள் ராசிநாதன் தனஸ்தானமான 2ஆம் வீட்டில் தனலாபாதிபதி (2க்கும் 11க்கும் உரிய புதன்) புத கிரகம் கன்னி ராசியில் உச்சமும் ஆட்சியும் பெற்று சூரியனோடு இணைந்து ஆதித்ய யோகம் தருவதால் அரச ஆதரவும், உதவிகளும் கிடைக்கலாம். பண வருவாய்க்கும் குறைவு இருக்காது. சிறப்புத் தரும் வாரமாகும்.

(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்) பிறரைப்பற்றி எண்ணுவதை விட தன்னைப் பற்றித் தாங்களே அறிந்து கொள்ள முயலும் இயல்பு கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே ஆட்சியும் உச்சமும் பெற்று அதே நேரம் உங்கள் ராசிக்கு செலவுதானமான 12ஆம் வீட்டுக்குரிய விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கின்றார். இதனால் வேலைவாய்ப்புகளுக்காகவும், தந்தைவழி உறவுகளாலும், தந்தையின் ஆரோக்கியம் சம்பந்தமாகவும், செலவுகள் ஏற்படும். வீண் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

(சித்திரை 3ஆம்,4ஆம் பாதம், சுவாதி, விசாகம்) எந்தச் செயலையும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது துலா ராசி நேயர்களின் சிறப்பாகும். உங்கள் ராசிநாதன் இம்மாதம் ஆரம்பத்தில் சுக்கிரன் தொழில் ஸ்தானம் எனப்படும் 10ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். சுய தொழிலில் ஈடுபடுவோர் பெரும் லாபம் அடைவர். ஆடம்பர பொருள் விற்பனையாளர்களும் நன்மை அடைவர். ராகு அட்டம தானத்தில் இருப்பதால் எதிலும் முன் கவனம் தேவை. கேது 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் வீண் வார்த்தைகளை தவிருங்கள்.

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை) ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரீமில் தான் இவர்கள் காணப்படுவர்.நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் ,அதற்கு ஏற்ற மன வலுவும் இவர்களிடம் காணப்படும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மேட ராசியில் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். தானாதிபதி 2ஆம் வீட்டிற்குரிய குரு தனஸ்தானத்தில் (2ஆம் வீட்டில்) 11ஆம் வீட்டிற்குரிய லாபாதிபதி புதன் ஸ்தானத்தில் 11ஆம் வீட்டில் இருப்பதால் பொருளாதார வளம் மேம்படும். எதிர்பாராத வண்ணம் நீண்ட நாட்களாக வராமலிருந்த பொருள் அல்லது பணம் வந்து சேரலாம்.

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்) எதையாவது செய்து தன் சொந்த வருமானத்தையும், சுகத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் அதிகப்படியாக உழைக்கும் குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குரு உள்ள ராசியிலேயே சஞ்சரிக்கிறார். 5,7,9 ஆகிய இடங்களிலும் குருவின் பார்வை படுவதால் பிள்ளைகளால் பெருமையும், சமூகத்தில் உங்களுக்கான பாராட்டும், தந்தை வழி உறவு மூலம் மகிழ்ச்சியும், புண்ணிய கருமங்களில் ஆர்வமும் ஏற்படும்.

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்) பெரிய அரசியல்வாதிகள், அறிஞர்கள், தொழிலகத்தை விஸ்தரித்துக் கொண்டு செல்லும் திறமை உடையவர்கள் மகர ராசியினர். உங்கள் ராசிநாதன் சனி 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றார். மோட்டார் வாகனங்கள், இரும்பு பொருட்கள் செலவுகள் அதிகம் ஏற்படும். ஏழரை சனியும் இப்பொழுது நடக்கின்றது. வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்) கும்ப ராசிக்காரர்கள் போன்ற குணம் படைத்தவர்கள் மனித சமூகத்தில் அதிகரித்தால் தான், மனித இனம் முன்னேற முடியும்.உங்கள் ராசிநாதன் சனி வக்கிர நிவர்த்தி ஆகி 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றார். அத்துடன் உங்கள் குடும்ப தானத்துக்குரிய 2ஆம் இடம் குடும்ப தானாதிபதியான குருவுடன் சேர்க்கைப்பெற்றுள்ளார். இதனால் குடும்ப உறவு மேன்மை அடைந்து மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக உயர்வு ஏற்படலாம்.

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
குருவின் அம்சம் இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். ஈகை, இரக்க குணம் காணப்படும். கணிதத்திலும், ஜோதிடத்திலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். தொழில் மாற்றமோ அல்லது இடமாற்றமோ நன்மையைத்தரும். மேலும் குருவோடு 11,12 ஆகிய இடங்களுக்குரிய சனி பகவானும் இணைந்து சஞ்சரிப்பதால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.