பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு கடந்த ஏழுநாட்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகளிலும் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வந்தன.
இதன்படி, இன்று திங்கிட்கிழமை பிரித்தானியாவின் லண்டன் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பெருந்திரளான தமிழ் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.