அனைத்துலக காணாமற்போனோர் தினம் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது.
உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த தினதில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைத்து மாபெரும் போராட்டம் பிரித்தானியாவின் டிராஃபல்கர் சதுக்கத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
இப்போராட்டத்தில் பெருமளவான தமிழ் புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டனர்.<span;>