January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு

தரையிலிருந்து வான் இலக்கை துல்லியமாக வைத்து எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை பரிசோதனையை இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

எட்டு முறைகளாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏவப்பட்ட ஏவுகணை மணிக்கு சுமார் 5803 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது .

இந்த ஏவுகணை அனைத்து கால நிலைகளிலும் அனைத்து இடங்களிலும் இருந்து ஏவப்பட கூடியது. தற்போது லடாக் எல்லையில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன.

ஒடிசா மாநிலம் பாலாசூரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த பரிசோதனை நடைபெற்றது.