November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி49 ரொக்கெட்

ஒன்பது செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி49 ரொக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.12 மணியளவில் செலுத்தப்பட்ட இந்த ரொக்கெட் சில நிமிடங்களில் இஓஎஸ்-1 உள்ளிட்ட 9 செயற்கைக்கோள்களும் பிரிந்து தமது புவி நீள் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த ரொக்கெட் மூலம் இஓஎஸ்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை 7 ஆம் திகதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக பி.எஸ்.எல்.வி-சி49 மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

மேலும் இந்த ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் லக்சம்பேர்க்கைச் சேர்ந்த 4 செயற்கைக்கோள், லித்துவேனியாவைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள் மற்றும் ஏனையவை அமெரிக்காவைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது.

காடுகள் கண்காணிப்பு,பேரிடர் மேலாண்மை,விவசாயம் மற்றும் புவி கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து இந்தியப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.