சவூதி அரேபியா வெளியிட்ட புதிய ரியால் நாணயத்தாளில் ஜம்மு காஷ்மீர் தனியான ஒரு பகுதியாக காண்பிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கான சவூதி அரேபிய தூதுவருக்கும் எங்கள் கவலையை வெளியிட்டுள்ளோம் என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான நாணயத்தாளில் இந்திய எல்லை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை எடுத்து கூறியுள்ளதோடு உடனடியாக இதனை திருத்துமாறு கோரியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒரு பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய 20 ரூபாய் ரியாலிலேயே ஜம்மு காஷ்மீர் தனியான பகுதியாக காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.