November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியப் பிரதமரின் டுவிட்டர் கணக்கிற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

PM @narendramodi என்ற டுவிட்டர் கணக்கிற்குள், , இன்று அதிகாலை ஊடுருவியுள்ள ஹேக்கர்கள், கணக்கை சிறிது நேரம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்ததை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிது நேரம் பிரதமரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தாகவும், அதில் பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் டுவிட்டர் நிறுவனத்திடம் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பிரதமரின் டுவிட்டர் கணக்கு மீட்க்கப்பட்டதாகவும், ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் அலுவகலம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி அவரின் டுவிட்டர் கணக்கு தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.