November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முப்படைகளின் கட்டளைத் தளபதி உள்ளிட்டோரின் மரணத்துக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இந்தியாவின் முப்படைகளின் கட்டளைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மரணத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்டோரின் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா அதன் துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்து விட்டதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிபின் ராவத் ஒரு உண்மையான தேசப்பற்று மிக்கவர் என்றும் இந்திய இராணுவத்தை நவீனமயப்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

பிபின் ராவத் உள்ளிட்டோரின் மரணத்தால் தான் பெரும் துயரடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.