November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால்  2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி காலமானார்.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.

இவரின், 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார்.

இதில், எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. 1982இல் தமிழக அரசியலில் தடம் பதித்த ஜெயலலிதாவை, 1983இல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

1984இல் மாநிலங்களவைக்கு தேர்வான தன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றதுடன் 1991இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியில், முதல்முறை முதலமைச்சராக பதவியேற்றார்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.

74 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி, தனது 68ஆவது வயதில் காலமானார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.