June 15, 2025 22:49:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலும் பரவியது ‘ஒமிக்ரோன்’ வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு ‘ஒமிக்ரோன் ‘ வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்கள், ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது. இந்த இருவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கொரோனா வைரஸை விட, ஒமிக்ரோன் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது

இந்நிலையில் அரசின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தற்போதைய சூழலில் மீற வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தற்போது நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடைய பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.