இந்திய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது.
பட்டாசு வெடிக்க தடை இருந்தபோதிலும், நகரம் முழுவதும் மக்கள் வியாழக்கிழமை இரவு வரை பட்டாசுகளை வெடித்ததன் காரணமாக காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது.
இதையடுத்து டெல்லி நகரின் வான் பரப்பு பட்டாசு புகை காரணமாக சாம்பல் நிறமாக மாறியுள்ளது.
ஏற்கனவே வாகன மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தூசி காரணமாக டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக மாறியுள்ளது.
காற்றில் உள்ள ஆபத்தான சிறிய மாசுபாடுகளான PM2.5-ன் செறிவு, வெள்ளியன்று டெல்லியின் சில பகுதிகளில், அதிகபட்ச அளவாக ஒரு கன மீட்டருக்கு 999 ஆக இருந்தது.
பல இடங்களில் 500க்கு அருகில் அல்லது அதற்கும் அதிகமான புள்ளி விவரங்களை அரச தரப்பு பதிவு செய்துள்ளது. இது “கடுமையான காற்று மாசுபாடு ” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.