January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்!

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒக்டோபர் 3 ஆம் திகதி ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னதாக ஆர்யன் கானுக்கு இரண்டு முறை பிணை வழங்குமாறு அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை விடுத்துவந்த போதும், போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவருக்கு பிணை வழங்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும் ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இந்நிலையில் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.