January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் தளபதி விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் அனைவருக்கும் ‘வாழ்த்துக்கள்’ என தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட நிர்வாகிகளை வெற்றியடைய செய்த மக்களுக்கு நடிகர் விஜய் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணைத் தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சங்கள் அடங்கிய திட்ட படிவத்தை தளபதி விஜய் அளித்துள்ளதாகவும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தளபதி உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

மக்கள் இயக்கத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள், மத்திய, மாநில அரசிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.