அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 12 மணி நேரமாக தொடர்ந்த இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 4,800 கிராம் தங்கம், 3.75 கிலோ வெள்ளி, ரூ.23.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் 20 கோடிக்கும் மேலான (இந்திய நாணயம்)சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ் ,19 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது .
இலஞ்ச ஒழிப்பு சோதனையின்போது தனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விஜயபாஸ்கர் .
சென்னை – 8 இடங்கள், புதுக்கோட்டை – 32 இடங்கள், திருச்சி – 4 இடங்கள், மதுரை -1 இடம், கோயம்புத்துார் -2 இடங்கள், காஞ்சிபுரம் -1 இடம், செங்கல்பட்டு – 2 இடங்கள் என மொத்தமாக 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.