November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- சீன எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பு இராணுவ கட்டளை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக லடாக் பகுதியில் சந்தித்துக்கொண்டனர்.

17 மாதங்களாக நிலவி வரும் அமைதியின்மை கடந்த வாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதே இராணுவ கட்டளை அதிகாரிகளின் சந்திப்பின் நோக்கமாகும்.

எனினும், இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாக தெரியவருகிறது.

பேச்சுவார்த்தையின் போது, தாம் ஆக்கபுர்வமான யோசனைகளை முன்வைத்ததாகவும் அதற்கு சீனா இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியா நியாயமற்ற, சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைப்பதாக சீன இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் எல்லைகளில் இராணுவத்தினரையும், பீரங்கிகளையும், போர் விமானங்களையும் குவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.