July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும்; பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆப்கானிஸ்தான் நிலைமையானது அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் ,சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,இந்தியா, பாகிஸ்தான்,ஈரான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

ஆப்கனில் தற்போது இருக்கும் நிலைமை நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்து விடும் என எச்சரித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

இவ்வாறான சூழ்நிலை மாற்றங்களால் ஆப்கனில் ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார்.

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்றுள்ளார்.