January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரள விமான விபத்து; 21 பேர் உயிரிழக்க விமானியின் தவறே காரணம்

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நிகழ்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதியன்று துபாயிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்தனர்.

விமானம் தரையிறங்கும் போது இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில், விமானி, துணை விமானி, பயணிகள் 19 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதியன்று துபாயிலிருந்து கோழிக் கோட்டிற்கு வந்த விமானத்தில் 184 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர்.

விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் மிகப்பெரிய அளவிலான விபத்தும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய விமான விபத்து விசாரணை பணியகத்தின் 257 பக்க அறிக்கை ஓராண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தரையிறக்குவதற்கான STANDARD OPERATING PROCEDURES எனப்படும் நிலையான இயக்க நடைமுறைகளை விமானி கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்கு காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.