ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐ.நா.பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடி,அங்கு ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 24 ஆம் திகதி அமெரிக்கா,அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதி ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
ஐ.நா.செல்லும் பிரதமர் மோடி அங்கு 23 ஆம் திகதி ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முக்கியமாக ஆப்கானிஸ்தான் விவகாரம் மற்றும் சீன ,பாகிஸ்தான் செயல்பாடுகள் என பல விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.