November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் பாதுகாப்பான 60 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள்

(Photo:wikipedia.org)

2021 ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான 60 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டெல்லி, மும்பை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

லண்டனை தளமாகக் கொண்ட The Economist Group ஊடக நிறுவனம் வருடாந்தம் வெளியிடும் பட்டியலிலேயே, உலகில் வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான நகரங்கள் 5 பிரிவுகளாக நிரற்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பாதுகாப்பில் சிட்னி நகரம் முதலிடத்தையும் சுகாதார பாதுகாப்பில் டோக்கியோ முதலாவது இடத்தையும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு தரப்படுத்தலில் ஹொங்கொங் முதலாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த மூன்று தரப்படுத்தலிலும் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

அத்தோடு சுற்று சூழல் பாதுகாப்பில் கோபன்ஹேகன் முதலாவது இடத்தை  பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் 82.2 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

கனடாவின் டொரன்டோ நகரம் 82.2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் 80.7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், சிட்னி 80.1 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் 80.0 புள்ளிகளுடன் டோக்கியோ 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

அத்தோடு அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டன் 15 ஆவது இடத்திலும், சீன தலைநகர் பீஜிங் 36 ஆவது இடத்திலும், ரஷ்ய தலைநகர் மொஸ்கோ 38 ஆவது இடத்திலுமுள்ளன.

இந்த பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி 56.1 புள்ளிகளுடன் 48 ஆவது இடத்தையும், வர்த்தக நகர் மும்பை 54.4 புள்ளிகளுடன் 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

மும்பை தலைநகர் டெல்லி டிஜிட்டல் பாதுகாப்பு முன்னணியில் 45.4 புள்ளிகளுடன் 53 வது இடத்தில் உள்ளது. தொற்று நோய்களின் போது சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில், மும்பை 60.8 புள்ளிகளுடன் 44 வது இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு பாதுகாப்பில் 57.3 புள்ளிகளுடன் 48 வது இடத்தில் உள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் தலைநகர் டெல்லி மற்றும் மும்பை முறையே 48 மற்றும் 50 ஆவது இடங்களை பெற்றுக் கொண்டிருந்தன.

இந்த பட்டியலில் இலங்கையின் நகரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.