January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் சீக்கிய அரசரின் சிலையை சேதப்படுத்தியதற்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கிய அரசர் ரஞ்சித் சிங் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் அச்சம் அடைந்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள், சூறையாடப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தி இருக்கிறது.