20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை மின்சாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிதி நிலைமை எப்படி இருந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,63,976 ரூபா கடன் சுமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையாக இதை செய்கிறோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார் .
கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் 5 வருடத்தில் எடுத்த பொது கடன் 3 லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது. அதில் 50% வருவாய் பற்றாக்குறைக்கு, தின செலவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கான வருமானம் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது. இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதி குழு ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளது என வெள்ளை அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது,எனக் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2006-2011 திமுக ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது கடன் வாங்கிதான் அன்றாட செலவுகளை செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பொருளாதார சரிவு என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முடக்கத்துக்கு முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.