
தமிழ் நாட்டில் மேலும் கட்டுப்பாடுகளுடன் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் மெல்ல மெல்ல நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.இதனால் இன்று தமிழக முதலமைச்சர் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்திருக்கிறார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 9 முதல் 23 ஆம் திகதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ் முறைப்படி ஆடி மாதம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
இந்நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் வழிபாட்டு தலங்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது .
அதிலும் முக்கியமாக ஆடி மாதத்தில் வெள்ளி,சனி,ஞாயிறு, அமாவாசை,பௌவுர்ணமி நாட்களில் மக்கள் அதிகமாக கோவில்களுக்கு செல்வர்.அந்த வகையில் இந்த நாட்களில் கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .