July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீடிப்பு

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள தளர்வுகளுடனான ஊரடங்கை ஜூலை மாதம் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் தடாகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் அரசியல், சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சு – சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.